ADDED : ஜன 31, 2026 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் 'ஸ்குவாஷ் இந்தியா' தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை இந்தியாவின் தான்வி கன்னா, 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற எகிப்தின் பரிதா வாலித் மோதினர்.
முதல் இரு செட்டை தான்வி, 11-9, 15-13 என போராடி கைப்பற்ற, 2-0 என முன்னிலை பெற்றார். பின் ஏமாற்றிய இவர், அடுத்த இரு செட்டுகளை 8-11, 10-12 என இழந்தார்.
ஐந்தாவது, கடைசி செட்டில் தான்வி 5-11 என எளிதாக கோட்டை விட்டார். முடிவில் தான்வி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பைனலில் எகிப்தின் ரெபாய், ஹொசாம் மோதினர். இதில் ரெபாய் 11-4, 11-7, 11-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.

