/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய அணி ஏமாற்றம் * ஆசிய டேபிள் டென்னிசில்...
/
இந்திய அணி ஏமாற்றம் * ஆசிய டேபிள் டென்னிசில்...
ADDED : அக் 13, 2025 11:15 PM

புவனேஸ்வர்: ஆசிய டேபிள் டென்னிசில் இந்திய ஆண்கள் அணி 0-3 என ஹாங்காங்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்தியாவின் புவனேஸ்வரில் ஆசிய அணிகளுக்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணிக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டது. நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, வலிமையான ஹாங்காங்கை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்தியாவின் மனுஷ் ஷா, 0-3 என (5-11, 9-11, 11-13), வாங் சங் டிங்கிடம் வீழ்ந்தார்.
அடுத்த போட்டியில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் மானவ் தக்கார், சன் பால்டுவினை சந்தித்தார். முதல் இரு செட்டை 8-11, 8-11 என இழந்த மானவ், அடுத்த இரு செட்டை 12-10, 11-9 என வென்றார். கடைசி செட்டை 8-11 என இழந்தார். முடிவில் மானவ் 2-3 என வீழ்ந்தார்.
மூன்றாவது போட்டியில் இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, 2-3 (11-7, 9-11, 14-12, 6-11, 7-11) என லாம் சியுவிடம் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 0-3 என தோற்று வெளியேறியது. ஆசிய டேபிள் டென்னிசில் 6 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக வெறுங்கையுடன் திரும்பியது.