/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ்: அபே சிங் வெற்றி
/
யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ்: அபே சிங் வெற்றி
ADDED : அக் 20, 2025 07:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிலாடெல்பியா: யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் 'ரவுண்டு-16' போட்டிக்கு இந்தியாவின் அபே சிங் முன்னேறினார்.
அமெரிக்காவில், யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்திய வீரர் அபே சிங், எகிப்தின் முகமது எல் ஷெர்பினியை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம், 2 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அபே சிங் 3-2 (11-8, 4-11, 4-11, 11-6, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரமித் டான்டன், நியூசிலாந்தின் பால் கோல் மோதினர். இதில் ஏமாற்றிய ரமித் டான்டன் 0-3 (5-11, 9-11, 7-11) என தோல்வியடைந்து வெளியேறினார்.