/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் மீராபாய் சானு * உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில்...
/
வெள்ளி வென்றார் மீராபாய் சானு * உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில்...
வெள்ளி வென்றார் மீராபாய் சானு * உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில்...
வெள்ளி வென்றார் மீராபாய் சானு * உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில்...
ADDED : அக் 03, 2025 10:53 PM

போர்டே: உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
நார்வேயின் போர்டே நகரில் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 87 நாடுகளில் இருந்து 477 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 48 கிலோ பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு 31, உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.
முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் மீராபாய் சானு, 84 கிலோ துாக்கினார். அடுத்து இரு முறை 87 கிலோ துாக்க முயன்று, முடியாமல் போக, 3வது இடம் பிடித்தார். பின் 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் அசத்திய மீராபாய் சானு, 115 கிலோ துாக்கி 2வது இடத்துக்கு முன்னேறினார். ஒட்டுமொத்தமாக 199 கிலோ துாக்கி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். வடகொரியாவின் ரி சாங்-கம், 213 கிலோ துாக்கி தங்கம் வென்றார். தாய்லாந்தின் தன்யதோமிற்கு (198) வெண்கலம் கிடைத்தது. இது, உலக சாம்பியன்ஷிப்பில் மீராபாய் சானு, வென்ற மூன்றாவது பதக்கம் ஆனது.
மகிழ்ச்சி
மீராபாய் சானு கூறுகையில்,'' அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு என அடுத்தடுத்து போட்டிகள் வரவுள்ளன. இந்நிலையில் பதக்கம் வென்ற மகிழ்ச்சி தருகிறது. தேசத்திற்கு சிறப்பான வெற்றியை தேடித்தருவேன்,'' என்றார்.