UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 10:04 PM

பெங்களூரு: சென்னை அணிக்காக மீண்டும் களமிறங்க காத்திருக்கிறார் தோனி.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 45. சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற இவர், பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணிக்காக பங்கேற்கிறார். முழங்கால், கால் வலி காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை. உடற்தகுதியை பொறுத்து, அடுத்த ஆண்டு களமிறங்கலாம் அல்லது ஓய்வு அறிவிக்கலாம்.
இது பற்றி பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி கூறியது:
முதலில் நான் உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டாக்டர்களின் அறிக்கையை பார்க்க வேண்டும். அடுத்த சீசனில் விளையாடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறேனா என்பது குறித்து வரும் டிசம்பருக்கு முன் முடிவு செய்யப்படும். ஒருவேளை போதிய உடற்தகுதி பெறவில்லை என்றால், இந்த ‘பழைய வாகனத்தை’ மீண்டும் சாலையில் செல்லும் அளவுக்கு தயார் செய்ய வேண்டியது டாக்டர்களின் பொறுப்பு.
கடந்த இரு ஆண்டுகளாக சென்னை அணி தடுமாறியது. அதே நேரம், பெங்களூரு அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டது. அடுத்த சீசனில் சென்னை அணி வீரர்கள் காயம் அடையாமல் இருக்க வேண்டும். அப்போது தான் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.
