sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஆக 17, 2025 10:04 PM

Google News

ADDED : ஆக 17, 2025 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செர்பியா 'சாம்பியன்'

ஜார்ஜியாவில் நடந்த 'யூரோ' கூடைப்பந்து (16 வயது) சாம்பியன்ஷிப் பைனலில் லிதுவேனியா, செர்பியா அணிகள் மோதின. இதில் செர்பிய அணி 99-86 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2007, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஜெர்மனி கலக்கல்

ஜெர்மனியில் நடந்த 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் பைனலில் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலை வகித்தது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஜெர்மனி 4-1 என வெற்றி பெற்று கோப்பை வென்றது.

அர்ஜென்டினா ஏமாற்றம்

அர்ஜென்டினாவில் நடந்த ரக்பி சாம்பியன்ஷிப் முதல் சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா அணி 24-41 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்காவில் நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி 38-22 என, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

ஸ்பெயின் அபாரம்

ருமேனியாவில் நடக்கும் பெண்களுக்கான (16 வயது) 'யூரோ' கூடைப்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 65-48 என லாட்வியாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் பிரிட்டன் அணி 55-60 என, சுலோவேனியாவிடம் தோல்வியடைந்தது.

எக்ஸ்டிராஸ்

* புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான (ஆக. 18-செப். 9, சென்னை) பஞ்சாப் அணியின் கேப்டனாக அன்மோல்பிரீத் சிங் நியமனம். இந்த அணியில் ராமன்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், அஷ்வனி குமார், ஷிவம் சர்மா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

* பூடானில், வரும் ஆக. 20-31ல் பெண்களுக்கான (17 வயது) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் கோல்கீப்பர் முன்னி, பீனா குமாரி, பிரியா, தனியா தேவி, அனுஷ்கா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

* நியூயார்க்கில் நடக்கவுள்ள யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஜூனியர் பிரிவு ஒற்றையரில் இந்தியாவின் மாயா 16, முதன்முறையாக பங்கேற்கிறார். ஆண்கள் ஜூனியர் பிரிவில் கிரிஷ் தியாகி, 3வது முறையாக களமிறங்க உள்ளார்.

* ஹரியானாவில், இந்திய மல்யுத்த வீராங்கனை பூஜா தண்டா, தொழிலதிபர் அபிஷேக் பூரா, நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் வரும் நவ. 13ல் நடக்கவுள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (2018) வெண்கலம் வென்றிருந்தார் பூஜா.






      Dinamalar
      Follow us