ADDED : செப் 30, 2025 10:09 PM

அல்காரஸ் 'சாம்பியன்'
டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் ஸ்பெயினின் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை 6-4, 6-4 என வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்கா கோல் மழை
ரான்காகுவா: சிலியில் நடக்கும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அமெரிக்கா 9-0 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியாவை வீழ்த்தியது. பிரான்ஸ் அணி 2-1 என தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது.
காலிறுதியில் கோகோ காப்
பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பென்சிக்கை 4-6, 7-6, 6-2 என வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
எக்ஸ்டிராஸ்
* கான்பெராவில் நடந்த ஜூனியர் பெண்கள் ஹாக்கி 4வது போட்டியில் இந்திய அணி 3-1 என, கான்பெரா சில் அணியை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இஷிகா 2, சோனம் ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
* டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தின் (அக். 12) சர்வதேச விளம்பர துாதுவராக, ஒலிம்பிக்கில் 9 தங்கம் வென்ற முன்னாள் அமெரிக்க தடகள வீரர் கார்ல் லுாயிஸ் 64, நியமிக்கப்பட்டார்.
* பெங்களூருவில் நடந்த இந்திய டூர்-3 சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள், பெண்கள் பிரிவில் முறையே எகிப்தின் உமர் எல் டோர்கி, மென்னா வாலித் சாம்பியன் பட்டம் வென்றனர்.
* தேசிய விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் வரவேற்கிறது. வரும் அக். 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
* கான்பூரில் நடக்க இருந்த இந்தியா 'ஏ', ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டி கனமழையால் கைவிடப்பட்டது.