sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 18, 2025 10:24 PM

Google News

ADDED : அக் 18, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிபாகினா முன்னேற்றம்

நிங்போ: சீனாவில் நடக்கும் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., நிங்போ ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினியை வீழ்த்தினார்.

தென் ஆப்ரிக்கா அபாரம்

இஸ்மாயிலியா: எகிப்தில் நடக்கும் ஆப்ரிக்க கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 8-3 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. 13 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா பைனலுக்கு முன்னேறியது. இதில் எகிப்தை சந்திக்கிறது.

பிரேசில் பிரமாதம்

ரபாட்: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தியது.

ஜெர்மனி ஜெயம்

ஜடார்: குரோஷியாவில், ஐரோப்பிய அணிகளுக்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஜெர்மனி அணி 3-1 என, குரோஷியாவை வென்றது. மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ் அணி 3-0 என பெல்ஜியத்தை வென்றது.

எக்ஸ்டிராஸ்

* ஏதென்சில் நடக்கும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் 'டிராப்' பிரிவில் இந்திய வீரர் ஜோராவர் சிங் சாந்து வெண்கலம் வென்றார்.

* அமெரிக்காவில் நடக்கும் பாஸ்டன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 2-3 (4-11, 9-11, 11-6, 11-3, 5-11) என எகிப்தின் ஜனா ஸ்வைபையிடம் தோல்வியடைந்தார்.

* ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் இந்திய வீரர் கிளிப்போர்டு மிராண்டா 43, நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us