sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : நவ 13, 2025 10:07 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரையிறுதியில் சின்னர்

டுரின்: இத்தாலியில், உலகின் 'டாப்-8' வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. 'பிஜோர்ன் போர்க்' பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார். தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த சின்னர் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தார்.

பேயர்ன் முனிக் வெற்றி

முனிக்: ஜெர்மனியில் நடந்த பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்தில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியை தோற்கடித்தது.

'யூரோ' பைனல் எப்போது

லண்டன்: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்தில், வரும் 2028ல் (ஜூன் 9 - ஜூலை 9) ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ') தொடர் நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள், 51 போட்டியில் விளையாடுகின்றன. போட்டிகள் 8 நகரங்களில் நடக்கவுள்ளன. பைனல், ஜூலை 9ல் லண்டனில் நடக்கவுள்ளது.

அனுபமா சாம்பியன்

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த உலக ஸ்னுாக்கர் (15-'ரெட்') பைனலில், இந்தியாவின் அனுபமா 23, ஹாங்காங்கின் இங் ஆன் யீ மோதினர். அபாரமாக ஆடிய சென்னை வீராங்கனை அனுபமா 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என 'திரில்' வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

எக்ஸ்டிராஸ்

* டில்லியில், வரும் நவ. 15-19ல் சீனியர் தேசிய வாள்சண்டை சாம்பியன்ஷிப் 36வது சீசன் நடக்கிறது. இதில் பவானி தேவி, பிராச்சி லோஹன், தனிக் ஷா, கரண் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* எகிப்தில் நடக்கும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங், மனு பாகர் முறையே 4, 7வது இடம் பிடித்து பைனலுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டனர்.

* பிரிமியர் லீக் 'டி-20' தொடருக்கான கோல்கட்டா அணியின் உதவி பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டார்.

* பிரிமியர் லீக் 2026 சீசனில், இந்திய 'ஆல்-ரவுண்டர்' ஷர்துல் தாகூர் (ரூ. 2 கோடி, லக்னோ), வெஸ்ட் இண்டீசின் ரூதர்போர்டு (ரூ. 2.6 கோடி, குஜராத்) மும்பை அணிக்காக விளையாட உள்ளனர். இவர்களை மும்பை அணி 'டிரேடு' செய்தது.

* பெங்களூருவில், பெண்களுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் 'பிளே-ஆப்' சுற்று இன்று துவங்குகிறது. இதில் இந்திய அணி, சுலோவேனியா (நவ. 15), நெதர்லாந்து (நவ. 16) அணிகளை சந்திக்கிறது.

* இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல், 'விசா' பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என, சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* டில்லியில், வரும் டிச. 1-7ல் இந்தியன் 'பிக்கிள் பால்' லீக் முதல் சீசன் நடக்கிறது.






      Dinamalar
      Follow us