ADDED : நவ 22, 2025 07:33 PM

பைனலில் இத்தாலி
போலோக்னா: இத்தாலியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் பெல்ஜியம், 'நடப்பு சாம்பியன்' இத்தாலி அணிகள் மோதின. மேட்டியோ பெர்ரேட்டினி, பிளாவியோ கோபோலி கைகொடுக்க இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
அர்ஜென்டினா 'சாம்பியன்'
அசன்சியன்: பராகுவேயில், தெற்கு, மத்திய அமெரிக்க பெண்களுக்கான 'யூத்' ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பைனலில் பிரேசில், அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 23-22 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கொலம்பியா கலக்கல்
பாசிக்: பிலிப்பைன்சில், பெண்களுக்கான உலக கோப்பை 'புட்சல்' கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கொலம்பிய அணி 2-0 என, கனடாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 6-0 என, மொராக்கோவை வென்றது. போலந்து அணி 6-0 என, பிலிப்பைன்சை தோற்கடித்தது.
சுவீடன் ஆதிக்கம்
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில், பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. அரையிறுதியில் இத்தாலியின் சுவீடனின் நில்சன் ஆண்டர்சன் 2-0 என பிரான்சின் ரோடர் கவுதியர்-ராட்டை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் சுவீடனின் அஹ்மன்-ஹெல்விக் 2-0 என, ஜெர்மனியின் விக்லரை வென்றார்.
எக்ஸ்டிராஸ்
* சையது முஷ்தாக் அலி டிராபி ('டி-20') தொடருக்கான பெங்கால் அணியில் முகமது ஷமி, ஆகாஷ் தீப் இடம் பெற்றுள்ளனர். மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான், ஷிவம் துபே தேர்வாகினர். கேப்டனாக ஷர்துல் தாகூர் நியமனம்.
* லண்டன் செஸ் கிளாசிக் 15வது சீசனில் (நவ. 26 - டிச. 7) இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 20, பங்கேற்கிறார்.
* ராஜஸ்தானில், வரும் நவ. 24 முதல் டிச. 5 வரை கேலோ இந்தியா பல்கலை., விளையாட்டு நடக்கிறது. இதற்கான போட்டிகள் ஜெய்ப்பூர், உதய்பூர் உள்ளிட்ட 7 இடங்களில் நடக்கவுள்ளன.
* வங்கதேச தலைநகர் தாகாவில் பெண்கள் உலக கோப்பை கபடி 2வது சீசன் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டாவை வீழ்த்திய இந்திய அணி முதலிடம் பிடித்தது. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்தியா, ஈரான் மோதுகின்றன.

