sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : டிச 11, 2025 11:01 PM

Google News

ADDED : டிச 11, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரையிறுதியில் பிரான்ஸ்

ரோட்டர்டாம்: ஜெர்மனி, நெதர்லாந்தில், பெண்களுக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 27 வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 31-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் நெதர்லாந்து அணி 28-23 என ஹங்கேரியை வென்றது. அரையிறுதியில் (டிச. 12) பிரான்ஸ்-ஜெர்மனி, நெதர்லாந்து-நார்வே அணிகள் மோதுகின்றன.

ரியல் மாட்ரிட் தோல்வி

மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில், ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய ரியல் மாட்ரிட் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. போர்ச்சுகலில் நடந்த போட்டியில் பென்பிகா அணி (போர்ச்சுகல்) 2-0 என, நபோலி அணியை (இத்தாலி) வென்றது.

ஜெர்மனி ஜெயம்

சாண்டியாகோ: சிலியில், பெண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கிறது. இதன் 5-8வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 1-2 என அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது.

எக்ஸ்டிராஸ்

* ஹாங்காங்கில், டபிள்யு.டி.டி., பைனல்ஸ் டேபிஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு 2வது லீக் போட்டியில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி 2-3 (7-11, 3-11, 11-4, 12-10, 4-11) என ஹாங்காங்கின் சுன் டிங் வோங், ஹோய் கெம் டூ ஜோடியிடம் தோல்வியடைந்தது.

* இந்திய பெண்கள் லீக் கால்பந்து 9வது சீசன் வரும் டிச. 20ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. முதல் போட்டியில் சேது எப்.சி., அணி, கிக்ஸ்டார்ட் எப்.சி., அணியை சந்திக்கிறது.

* நமீபியா, ஜிம்பாப்வேயில் (2026, ஜன. 15 - பிப். 6), 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் 16வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் ஆர்யன் சர்மா, ஜான் ஜேம்ஸ் என, இரண்டு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

* பெண்கள் உலக கோப்பை ஹாக்கி (2026, ஆக. 14-30, இடம்: பெல்ஜியம், நெதர்லாந்து) 16வது சீசனுக்கான தகுதிச் சுற்று ஐதராபாத்தில், அடுத்த ஆண்டு மார்ச் 8-14ல் நடக்கவுள்ளது.






      Dinamalar
      Follow us