/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு நான்கு வெண்கலம் * உலக ஜூனியர் மல்யுத்தத்தில்...
/
இந்தியாவுக்கு நான்கு வெண்கலம் * உலக ஜூனியர் மல்யுத்தத்தில்...
இந்தியாவுக்கு நான்கு வெண்கலம் * உலக ஜூனியர் மல்யுத்தத்தில்...
இந்தியாவுக்கு நான்கு வெண்கலம் * உலக ஜூனியர் மல்யுத்தத்தில்...
ADDED : அக் 25, 2025 11:04 PM

நோவி சாத்: உலக மல்யுத்தத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு நான்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தன.
செர்பியாவில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. 59 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சரிகா, 12-6 என போலந்தின் படோஸ்கையை வென்று, பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஹன்சிகா (53), 11-0 என ஸ்பெயினின் ஜவுமே சோலெரை சாய்த்து, பைனலுக்கு முன்னேறினார்.
65 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் புல்கிட், 8-4 என ஹங்கேரியின் எனிகோவை வென்றார். 55 கிலோ பிரிவில் இந்தியாவின் நிஷூ, 3-1 என உக்ரைனின் அல்பினாவை வென்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் நேஹா (57), ஹங்கேரியின் ரோஜாவை 5-0 என சாய்த்து வெண்கலம் வசப்படுத்தினார். இந்தியாவின் ஸ்ரீஷ்டி (68), 6-1 என ஹங்கேரியின் கரோலினாவை வீழ்த்தி, வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 6 வெண்கலம் வென்றுள்ளது.