
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஸ்பெயின் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் அன்கிதா ரெய்னா.
ஸ்பெயினில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ஸ்பெயினின் மரியா மார்டினசை சந்தித்தார். முதல் செட்டை அன்கிதா 6-1 என எளிதாக கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் ஏமாற்றிய அன்கிதா, 3-6 என இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டில் அன்கிதா, 6-2 என அசத்தினார்.
இரண்டு மணி நேரம், 2 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா, 6-1, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு நுழைந்தார். இதில் சுவிட்சர்லாந்தின் ரைசரை எதிர்கொள்கிறார்.