ADDED : மே 17, 2025 10:38 PM

போர்டியாக்ஸ்: இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி சாலஞ்சர் தொடரின் பைனலுக்குள் நுழைந்தது.
பிரான்சில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே, 'நம்பர்-3', பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்சேலோ மெலோ ஜோடியை சந்தித்தது.
இதன் முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட் 6-6 என இழுபறி ஆனது. இதையடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' பாம்ப்ரி ஜோடி 7-6 என வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 19 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் 'நம்பர்-4' ஜோடி போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ, ஆஸ்திரியாவின் லுகாஸ் ஜோடியை சந்திக்க உள்ளது.