/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அரையிறுதியில் ராம்குமார் ராமநாதன்
/
அரையிறுதியில் ராம்குமார் ராமநாதன்
ADDED : மார் 15, 2024 09:05 PM

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் ஜோடி முன்னேறியது.
இந்தியாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் டில்லியில் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சக வீரர் விஸ்வகர்மாவை சந்தித்தார். முதல் செட்டை ராமநாதன் 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டை 6-2 என வசப்படுத்தினார்.
முடிவில் ராமநாதன் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் கரண் சிங், தாய்லாந்தின் விஷயாவை 6-1, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் சுல்தானோவ் ஜோடி, 2-6, 4-6 என இந்தியாவின் விஷ்ணுவர்தன், சித்தாந்த் ஜோடியிடம் வீழ்ந்தது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், பரிக்சித் ஜோடி, ஜப்பானின் கவாச்சி, தென் கொரியாவின் ஷின் ஜோடியை 6-0, 6-3 என சாய்த்தது.

