ADDED : நவ 17, 2026 10:29 PM

டென்னிஸ்: அல்காரஸ் அபாரம்
டுரின்: இத்தாலியின் டுரின் நகரில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. உலகின் ‘டாப்–8’ வீரர்கள் இதில் இரு பிரிவுகளாக பங்கேற்கின்றனர். இவான் லெண்டில் பிரிவில் நடந்த லீக் போட்டியில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் தியபோவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ், 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெத்வடேவ், இத்தாலியின் கோபோல்லி மோதினர். இதில் மெத்வடேவ் 7–6, 6–3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
ஜெர்மனியிடம் சரிந்தது நெதர்லாந்து
பெர்லின்: ஐரோப்பிய அணிகளுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து 5வது சீசன் நடக்கிறது. ஜெர்மனியின் பெர்லினில் நடந்த ‘குரூப்–2’ போட்டியில், ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 5–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மனி வீரர் விர்ட்ஸ் (60, 71) இரண்டு கோல் அடித்தார். டெர்ரி லயோனல் 41 வது நிமிடம் முதல் கோல் அடித்தார். நிகோ செட்ரிச் (66), க்ருடா (77) தங்கள் பங்கிற்கு கோல் அடித்தார். கிரீசில் நடந்த போட்டியில் கிரீஸ் அணி 1–0 என்ற கணக்கில் செர்பியாவை வென்றது.
இப்பிரிவில் இருந்து ஜெர்மனி (11), நெதர்லாந்து (11) அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.
