sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

இரண்டாவது சுற்றில் சஹாஜா

/

இரண்டாவது சுற்றில் சஹாஜா

இரண்டாவது சுற்றில் சஹாஜா

இரண்டாவது சுற்றில் சஹாஜா


ADDED : பிப் 28, 2024 10:03 PM

Google News

ADDED : பிப் 28, 2024 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருகிராம்: பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு சஹாஜா முன்னேறினார்.

இந்தியாவின் ஹரியானாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஆயுமி கோஷிஷியை எதிர்கொண்டார்.

முதல் செட்டை சஹாஜா 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட இவர், 6-2 என வசப்படுத்தினார். முடிவில் சஹாஜா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

அன்கிதா அபாரம்

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, கஜகஸ்தானின் குளம்பயேவா ஜோடி, இந்தியாவின் ஜீல் தேசாய், ஜப்பானின் ஓகுவாகி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 2-6 என இழந்த அன்கிதா ஜோடி அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' அன்கிதா ஜோடி 11-9 என அசத்தியது.

முடிவில் அன்கிதா ஜோடி 2-6, 6-3, 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.






      Dinamalar
      Follow us