/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல்
/
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல்
ADDED : ஏப் 02, 2024 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மர்ராகெச்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
மொராக்கோவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகத் தரவரிசையில் 95வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 99 வது இடத்திலுள்ள பிரான்சின் கோரன்டின் மவுடெட்டை சந்தித்தார். முதல் செட்டை சுமித் நாகல் 4-6 என கோட்டை விட்டார்.
இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்த இவர், 6-3 என கைப்பற்றினார். தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் அசத்திய சுமித் நாகல் 6-2 என எளிதாக கைப்பற்றினார். இரண்டு மணி நேரம் 11 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 4-6, 6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

