ADDED : ஏப் 22, 2024 10:39 PM

ஷென்ஜென்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.
சீனாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், செக் குடியரசின் டொமினிக் பாலனை சந்தித்தார். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ராம்குமார், அடுத்த செட்டை 6-2 என வசப்படுத்தினார். முடிவில் ராமநாதன் 6-4, 6-2 என வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், சீனாவின் லினாங் ஜியாவோவை எதிர்கொண்டார். முதல் செட்டை சசிக்குமார் 7-5 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 4-6 என கோட்டை விட்டார்.
தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டிலும் சொதப்பிய இவர், 4-6 என நழுவவிட்டார். இரண்டு மணி நேரம், 17 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சசிக்குமார் 7-5, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

