ADDED : அக் 30, 2024 08:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சியோல்: சாலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி முன்னேறியது.
தென் கொரியாவின் சியோலில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, ஸ்பெயினின் ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலியாவின் ரோமியாஸ் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், கலியாண்டா பூனாச்சா ஜோடி, 6-3, 7-5 என்ற நேர் செட்டில் பிரான்சின் எஸ்கோபியர், பெய்ரே ஜோடியை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தது.