ADDED : ஆக 08, 2024 11:03 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்பெயினின் நடால் விலகினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரும் ஆக. 26ல் துவங்குகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் 38, பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இத்தொடரில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் நடால் செய்தி வெளியிட்டிருந்தார். இதன்மூலம் நடப்பு ஆண்டில் 3வது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் இருந்து விலகினார். இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் மட்டும் பங்கேற்ற இவர், ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டனில் விளையாடவில்லை. கடந்த ஆண்டும் 3 கிராண்ட்ஸ்லாம் தொடரில் மட்டும் களமிறங்கினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நடால், ஒற்றையரில் 2வது சுற்று, இரட்டையரில் காலிறுதியோடு திரும்பினார். இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நடால், யு.எஸ்., ஓபனில் 4 முறை (2010, 2013, 2017, 2019) கோப்பையை கைப்பற்றினார். கடந்த ஆண்டு இடுப்பு பகுதி காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட இவர், ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இதுகுறித்து நடால் வெளியிட்ட செய்தியில், ''யு.எஸ்., ஓபனில் பங்கேற்பது குறித்து தற்போது தெளிவான பதிலை சொல்ல முடியாது. விரைவில் உங்களுக்கு தெரிவிப்பேன். என்னை பொறுத்தவரை இதில் பங்கேற்பது கடினம்,'' என தெரிவித்திருந்தார்.