/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
விம்பிள்டன்: ஒசாகா அதிர்ச்சி தோல்வி
/
விம்பிள்டன்: ஒசாகா அதிர்ச்சி தோல்வி
ADDED : ஜூலை 04, 2025 11:04 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் ஜப்பானின் ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷ்யாவின் அனஸ்டாசியா பவுலிசென்கோவா மோதினர். இதில் ஏமாற்றிய ஒசாகா 6-3, 4-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-3, 5-7, 6-3 என ஹங்கேரியின் டால்மா கால்பியை தோற்கடித்தார்.
இரண்டாவது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 5-7, 6-2, 6-1 என அமெரிக்காவின் கேட்டி மெக்னலியை வென்றார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-1 என, கிரீசின் மரியா சக்காரியை வீழ்த்தினார்.
ஷெல்டன் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-2, 7-5, 6-4 என ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை வீழ்த்தினார். பிரான்சின் மோன்பில்ஸ் 4-6, 6-1, 6-4, 6-7, 4-6 என ஹங்கேரியின் மார்டன் புக்சோவிக்சிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
இரண்டாவது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-3 என ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக்கை வீழ்த்தினார். குரோஷியாவின் மரின் சிலிக் 6-4, 6-3, 1-6, 6-4 என பிரிட்டனின் ஜாக் டிராப்பரை தோற்கடித்தார்.