/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
நான்காவது சுற்றில் ரடுகானு * விம்பிள்டன் டென்னிசில்...
/
நான்காவது சுற்றில் ரடுகானு * விம்பிள்டன் டென்னிசில்...
நான்காவது சுற்றில் ரடுகானு * விம்பிள்டன் டென்னிசில்...
நான்காவது சுற்றில் ரடுகானு * விம்பிள்டன் டென்னிசில்...
ADDED : ஜூலை 06, 2024 11:10 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிசிஸ் நான்காவது சுற்றுக்கு எம்மா ரடுகானு முன்னேறினார்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 135 வது இடத்திலுள்ள பிரிட்டனின் எம்மா ரடுகானு, 'நம்பர்-9' இடத்திலுள்ள கிரீசின் மரியா சக்காரியை எதிர்கொண்டார். முதல் செட்டை ரடுகானு 6-2 என கைப்பற்றினார்.
தொடர்ந்து அசத்திய ரடுகானு, அடுத்த செட்டை 6-3 என வசப்படுத்தினார். முடிவில் ரடுகானு 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் கோகோ காப், 6-4, 6-0 என பிரிட்டனின் கார்டெலை சாய்த்தார். மற்றொரு போட்டியில் குரோஷியாவின் வெகிச், 7-6, 6-7, 6-1 என உக்ரைனின் யஸ்டிரிம்ஸ்காவை வென்றார். லாட்வியா வீராங்கனை ஆஸ்டபென்கோ, அமெரிக்காவின் பெராவை 6-1, 6-3 என வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ், 5-7, 6-2, 4-6, 7-6, 6-2 என அமெரிக்காவின் டியாபோவை வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். பல்கேரியாவின் டிமிட்ரோவ், 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பிரான்சின் மான்பில்சை வென்றார்.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் ஒலிவெட்டி ஜோடி, 6-4, 4-6, 3-6 என்ற நேர் கணக்கில் ஜெர்மனியின் கெவின், புயட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.