/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
30 நாள் சிசு கொலை தாய், 5 பேர் கைது
/
30 நாள் சிசு கொலை தாய், 5 பேர் கைது
ADDED : மே 02, 2024 02:46 AM

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன் கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா, 48, என்ற மனைவியும் ஐந்து மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா, 18, திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகார்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியை சேர்ந்த அன்புதுரை, 21, என்பவரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த மார்ச் 29ல், மஞ்சுளாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த, 28ம் தேதி நள்ளிரவு குழந்தையை காணவில்லை என, மஞ்சுளா அலறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மீன் சுருட்டி போலீசார் விசாரணையில், டி.என்.ஏ., பரிசோதனைக்கு பயந்து, குழந்தையை கொன்று, வீட்டின் முன் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் குழி தோண்டி புதைத்து விட்டு மஞ்சுளா நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மஞ்சுளா, பரிமளா உட்பட ஐந்து பேரை விசாரணை செய்து வருகின்றனர்.

