/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
நின்ற லாரி மீது கார் மோதல் தஞ்சையை சேர்ந்த 4 பேர் பலி
/
நின்ற லாரி மீது கார் மோதல் தஞ்சையை சேர்ந்த 4 பேர் பலி
நின்ற லாரி மீது கார் மோதல் தஞ்சையை சேர்ந்த 4 பேர் பலி
நின்ற லாரி மீது கார் மோதல் தஞ்சையை சேர்ந்த 4 பேர் பலி
ADDED : மே 07, 2024 11:04 PM

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், திருமானுார் அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில், பெரம்பலுார் - -மானாமதுரை நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி பிரிவு ரோடு அருகே, நேற்று மாலை 5:20 மணிக்கு ஜல்லி ஏற்றிய லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அரியலுாரில் இருந்து சென்றவர்களின் ஸ்விப்ட் டிசையர் கார், லாரியின் பின்னால் மோதியது. இதில், காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அங்கிருந்தோர், காரில் இருந்தவர்களை மீட்டனர். திருமானுார் போலீசார் விசாரித்ததில், விபத்தில் இறந்தவர்கள் தஞ்சாவூர் மேலவீதியை சேர்ந்த ஈஸ்வரன், 24, புவனேஷ் கிருஷ்ணசாமி,18, செல்வா, 17, சண்முகம், 23, என்பது தெரிந்தது.
இவர்கள் நான்கு பேரும் அரியலுாரில் நடந்த ஹோம நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டது தெரிந்தது.
இறந்த நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

