/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை அமைச்சர் சிவசங்கர் சர்ச்சை பேச்சு
/
ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை அமைச்சர் சிவசங்கர் சர்ச்சை பேச்சு
ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை அமைச்சர் சிவசங்கர் சர்ச்சை பேச்சு
ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை அமைச்சர் சிவசங்கர் சர்ச்சை பேச்சு
ADDED : ஆக 02, 2024 10:13 PM
அரியலுார்:மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளையொட்டி, கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலில் ஆடித் திருவாதிரை திருவிழா நடைபெற்றது.
விழாவை தொடக்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
நம் வரலாற்றை எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பு தான் இந்த விழா. நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த மாமன்னனர் ராஜேந்திர சோழனை கொண்டாட வேண்டியது நம் கடமை. ராஜேந்திரசோழன் வாழ்ந்ததற்கு சான்றாக அவர் கட்டிய கோவில்கள், செப்பேடுகள், சிற்பங்கள் இருக்கின்றன. நாம் அதை வைத்து ஆதாரபூர்வமாக கொண்டாடுகிறோம்.
ஆனால், ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது. அவர், ஒரு அவதாரம் என்கின்றனர். ஆனால், நம்மை மயக்கி, நம் வரலாற்றை மறைத்து, வேறொரு வரலாற்றை உயர்த்தி காட்டவே ராமருக்கு கோவில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி.
இதை முன்னாள் முதல்வர் கருணாநிதி உணர்ந்ததன் காரணமாக தான், நமக்கான அடையாளம் எது? நமக்கான பண்பாடு எது? என்பதை அறிய பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.
அந்த வகையில், ராஜேந்திரசோழன் வரலாற்றை நாம் நினைவு கூறவேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தான், அரசு விழாவாக கொண்டாட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.