/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
அதிக வட்டி தருவதாக ரூ.5.41 கோடி மோசடி
/
அதிக வட்டி தருவதாக ரூ.5.41 கோடி மோசடி
ADDED : செப் 21, 2024 11:13 PM
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சாந்தி, 50; இவர், பெரம்பலுார் மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், 42, என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார். ஆனந்தராஜ், தான் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 6 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
நம்பிய சாந்தி, 70 லட்சம் ரூபாயும், சாந்தியின் மகன் பார்த்திபன், 4.30 கோடி ரூபாய் மற்றும் அவர்கள் உறவினர்கள் என மொத்தம், 5.41 கோடி ரூபாயை 2022ல் ஆனந்தராஜிடம் கொடுத்தனர்.
பின்னர், ஆனந்தராஜ் தன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஆப் லாக் ஆகிவிட்டது. என்னால் அசல் மற்றும் வட்டி கொடுக்க இயலாது என, சாந்தியிடம் கூறியுள்ளார். சாந்தி புகாரின்படி, அரியலுார் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆனந்தராஜை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.