/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு செங்கையில் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி

ADDED : மார் 28, 2024 10:57 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில், தெருக்கூத்து கலைஞர்கள் வாயிலாக, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், நேற்று விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. இதேபோல், மாவட்டம்முழுதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள்தெரிவித்தனர்.