/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை சட்டசபை தொகுதிகளில் புதிதாக 30 துணை ஓட்டுச்சாவடிகள்
/
செங்கை சட்டசபை தொகுதிகளில் புதிதாக 30 துணை ஓட்டுச்சாவடிகள்
செங்கை சட்டசபை தொகுதிகளில் புதிதாக 30 துணை ஓட்டுச்சாவடிகள்
செங்கை சட்டசபை தொகுதிகளில் புதிதாக 30 துணை ஓட்டுச்சாவடிகள்
ADDED : மார் 29, 2024 09:14 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், 30 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலையொட்டி, தொகுதி முழுதும் ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 1,500க்கும் அதிகமான ஓட்டுச்சாவடிகளை, இரண்டு ஓட்டுச்சாவடிகளாக பிரித்தல், சேதமடைந்த கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளை மாற்றி அமைத்தல், இடமாற்றம், ஓட்டுச்சாவடி பெயர் மாற்றம், திருத்தம் ஆகிய பணிகள் செய்யப்பட்டன.
அதனால், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 2,795ல் இருந்து 2,825 ஆக அதிகரித்துள்ளது. இதில், 30 துணை ஓட்டுச் சாவடிகள், 95 ஓட்டச்சாவடி மையங்கள் இடமாற்றம், 228 ஓட்டுச்சாவடிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

