/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனுநீதி நாளில் ரூ.31 லட்சம் உதவி
/
மனுநீதி நாளில் ரூ.31 லட்சம் உதவி
ADDED : செப் 12, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்:சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சியில், மனுநீதி நாள் முகாம், நேற்று கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது.
இதில், உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை என, மொத்தம் 104 பயனாளிகளுக்கு, 31.08 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேளாண்மை, சுகாதாரம், கூட்டுறவு, தோட்டக்கலைத் துறை, ஊரக வளர்ச்சி, கல்வித்துறை உட்பட, பல்வேறு துறை சார்பாக, தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுஇருந்தன.
இதில், அரசு வாயிலாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. கிராம மக்கள், தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக எழுதி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.