/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.35,000 அபராதம்
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.35,000 அபராதம்
ADDED : செப் 09, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஞாயிறு விடுமுறையான நேற்று, சுற்றுலா வாகனங்களை, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கண்காணித்தனர்.
அப்போது, புறவழி சந்திப்பில், அளவுக்கு மீறி, 24 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்திற்கு, போக்குவரத்து விதிகளை மீறியதாக, போலீசார் 1,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
நேற்று மட்டும், போக்குவரத்து விதிகளை மீறியதாக, 20 வழக்குகள் பதியப்பட்டு, 35,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.