/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 4 டாஸ்மாக் கடைகள் நகருக்கு வெளியே மாற்ற பரிந்துரை
/
செங்கையில் 4 டாஸ்மாக் கடைகள் நகருக்கு வெளியே மாற்ற பரிந்துரை
செங்கையில் 4 டாஸ்மாக் கடைகள் நகருக்கு வெளியே மாற்ற பரிந்துரை
செங்கையில் 4 டாஸ்மாக் கடைகள் நகருக்கு வெளியே மாற்ற பரிந்துரை
ADDED : ஆக 02, 2024 11:25 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி ஜி.எஸ்.டி., சாலையில், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் அருகில், தலா ஒரு டாஸ்மாக் கடையும், ராட்டினங்கிணறு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகளும் உள்ளன.
இச்சாலையில், மாலை நேரங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர், அத்தியவாசிய பணிக்கு செல்வோர், அதிக அளவில் வாகனங்களில் செல்கின்றனர்.
இப்பகுதியில், டாஸ்மாக் கடைக்கு செல்லும் குடிமகன்கள் மதுகுடித்து, போதை தலைக்கு ஏறியதும், சாலையில் செல்லும் பெண்களை கிண்டல் செய்து வம்புக்கு இழுக்கின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதுமட்டும் இன்றி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த கடைகள், நகருக்கு வெளியில் மாற்ற வேண்டும் என, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை இன்றி கிடப்பில் போட்டுள்ளனர்.
இதற்கிடையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், ஜி.எஸ்.டி., சாலை அருகில், டாஸ்மாக் கடைகள் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவை மீறி, டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என, கடந்த 30ம் தேதி, சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அமைச்சர் பரிந்துரை செய்தார்.