/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வீஸ் சாலையில் 5 அடி பள்ளம் கேபிள் நிறுவன பணியால் அபாயம்
/
சர்வீஸ் சாலையில் 5 அடி பள்ளம் கேபிள் நிறுவன பணியால் அபாயம்
சர்வீஸ் சாலையில் 5 அடி பள்ளம் கேபிள் நிறுவன பணியால் அபாயம்
சர்வீஸ் சாலையில் 5 அடி பள்ளம் கேபிள் நிறுவன பணியால் அபாயம்
ADDED : ஆக 09, 2024 01:55 AM

மறைமலை நகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மறைமலை நகர் அடுத்த சாமியார் கேட் சர்வீஸ் சாலையை சாமியார் கேட், பேரமனுார், தர்னீஸ் ஸ்கொயர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையில் பூமிக்கடியில் தனியார் கேபிள் இணைப்புகள் செல்கின்றன. இந்த இணைப்புகளை பராமரிக்கும் பணி, சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதற்காக, சாமியார் கேட் அருகே உள்ள சர்வீஸ் சாலையில், 5 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் பொக்லைன் இயந்திரம் வாயிலாக தோண்டப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில், பள்ளம் இருப்பதை அறிவுறுத்தும் விதமாக, எந்தவொரு எச்சரிக்கை பலகை மற்றும் பணி நடைபெறுவதற்கான அறிவிப்பு பலகை, இரவில் ஒளிரும் பட்டைகள் உள்ளிட்டவை வைக்கப்படவில்லை.
இதன் காரணமாக, மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இரவு பணி முடித்து, இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் இரவில் ஒளிரும் பட்டைகள் வைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.