/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை
/
சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை
ADDED : ஏப் 28, 2024 01:51 AM
கூடுவாஞ்சேரி:ஏப்ரல் மாதத்திற்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக, நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் தாமோதரன் தெரிவித்ததாவது:
நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில் வசிப்போர், தங்களது சொத்து வரியை, இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவோருக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
மேலும், சொத்து வரியை செலுத்தாதவர்களுக்கு, அபராத தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும். எனவே, அபராத தொகையை தவிர்த்து, இம்மாத இறுதிக்குள் சொத்து வரிகளை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

