ADDED : பிப் 23, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து வரும் 25ம் தேதி 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப, வரும் 26ம் தேதியும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணியர், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்துகளை சீராக இயக்க, பிரதான நிலையங்களில் சிறப்பு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

