/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 552 மனு ஏற்பு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 552 மனு ஏற்பு
ADDED : ஆக 07, 2024 10:29 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர், குண்ணவாக்கம், தென்மேல்பாக்கம், கொண்டமங்கலம், திருவடிசூலம், பெரியபுத்தேரி ஆகிய ஊராட்சிகளுக்கு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், அஞ்சூர் சமுதாயநலக்கூடத்தில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில், நேற்று நடந்தது. தாசில்தார் பூங்குழலி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த முகாமில், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்றிதழ், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி மற்றும் மகேந்திரா வேர்ல்டு சிட்டி வரை வரும் மாநகர பேருந்துகளை, அஞ்சூர் கிராமம் வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 552 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து துறை அலுவலர்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டதாக, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இந்த முகாமில், சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.