/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புக்கத்துறை சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார்
/
புக்கத்துறை சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார்
ADDED : ஜூன் 10, 2024 12:56 AM

மதுராந்தகம் : ஹைதராபாத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக, தாம்பரம் ரயில் நிலையம் செல்வதற்காக, வாடகை காரில் சென்றனர்.
அப்போது, மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை அருகே கார் சென்றபோது, கார் இன்ஜினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
புகை வருவதை அறிந்த ஓட்டுனர் மற்றும் காரில் பயணம் செய்தவர்கள் அனைவரும், பத்திரமாக கீழே இறங்கி உயிர் தப்பினர். பின், இன்ஜினில் இருந்து புகை அதிகமாக வந்து, சில வினாடிகளில் கார் மளமளவென தீப்பற்றி எரியத் துவங்கியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.