/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரு தரப்பினர் மோதல் 14 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பினர் மோதல் 14 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 15, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மேல்கனகம்பட்டு கிராமத்தில், செங்கழுநீர் ஓடை மற்றும் ஆமையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், நேற்று முன்தினம் மாலை கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே எதிர்பாராத வகையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, இரு தரப்பினரும் மானாமதி போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், இரு தரப்பினரையும் சேர்ந்த 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.