/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு ரூ.3.67 கோடியில் புது கட்டடம்
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு ரூ.3.67 கோடியில் புது கட்டடம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு ரூ.3.67 கோடியில் புது கட்டடம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு ரூ.3.67 கோடியில் புது கட்டடம்
ADDED : ஆக 23, 2024 08:09 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் குறுகிய இடத்தில், பழமையான சேதமடைந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதுகுறித்து, நம் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பழைய அலுவலக பகுதியை தவிர்த்து, சற்று வடக்கில், புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்பின், 1.27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, முத்திகைநல்லான்குப்பம் பகுதியில், செவ்வாய் தோறும் இயங்கும் வாரச்சந்தை பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 2.40 கோடி ரூபாய் மதிப்பில், 100 கடைகள் அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டங்களின் கட்டுமான பணிகள், நேற்று முன்தினம் பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் யுவராஜ், செயல் அலுவலர் லதா, வார்டு உறுப்பினர்கள், முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.