/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலாப் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலி
/
சிலாப் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலி
ADDED : மே 15, 2024 10:42 PM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, அப்துல்லா தெருவில் வசிப்பவர் மணிகண்டன், 24. இவரின் மனைவி சூர்யா, 20. தம்பதிக்கு, நிரஞ்சன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.
மணிகண்டன், பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் வசித்து வந்த வீடு, மிகவும் பழமையானது என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, சூர்யா, தன் மகன் நிரஞ்சனுடன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் முன்புறத்தில் இருந்த சிமென்ட் சிலாப் இடிந்து, இருவர் மீதும் விழுந்தது.
இந்த விபத்தில், சூர்யாவுக்கு கழுத்தில் பலத்த காயமும், குழந்தைக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள், இருவரைடும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை நிரஞ்சன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சூர்யாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.