/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையில் பொருட்கள் வீண்
/
பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையில் பொருட்கள் வீண்
பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையில் பொருட்கள் வீண்
பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையில் பொருட்கள் வீண்
ADDED : செப் 11, 2024 12:43 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டில், மதுராந்தகம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ், அருளாலீஸ்வரன் கோவில் தெருவில், நியாய விலை கடை செயல்படுகிறது.
அங்கு, 350-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான, குடிநீர் தொட்டி மற்றும் மோட்டார் அறையுடன் கூடிய கட்டடத்தில், அந்த நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.
தற்போது, கட்டடத்தின் உட்பகுதியில், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
சிறிய அறையில் ரேஷன் கடை செயல்பட்டு வருவதால், மழைக் காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டும், சுவர்களில் ஈரப்பதமாகியும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வீணாகின்றன.
அதனால், கடையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு, அப்பகுதியில் சில நபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ரேஷன் பொருட்கள் பாதுகாப்பதில் சிரமம் உள்ளதாக, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தற்போதைக்கு வேறு இடத்திற்கு கடையை மாற்றி, நியாய விலை கடைக்கு என, புதிதாக கட்டடம் கட்டித் தரக்கோரி, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.