/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாசடைந்த கோவில் குளம் சீரமைக்க வேண்டுகோள்
/
மாசடைந்த கோவில் குளம் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 22, 2024 12:42 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் பகுதியில் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில், மார்கழி உற்சவம், சித்திரைத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் விமரிசையாகவும், தினசரி பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவில் எதிரே பழமைவாய்ந்த திருக்குளம் உள்ளது. முன்னோர்கள் கோவிலில் வழிபடுவதற்கு முன், திருக்குளத்தில் நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
திருக்குளம் முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, திருக்குளத்தை சீரமைத்து, குளத்தை சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.