/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்விளக்குகள் இல்லாத சாலை; ஜானகிபுரம் கிராமவாசிகள் அச்சம்
/
மின்விளக்குகள் இல்லாத சாலை; ஜானகிபுரம் கிராமவாசிகள் அச்சம்
மின்விளக்குகள் இல்லாத சாலை; ஜானகிபுரம் கிராமவாசிகள் அச்சம்
மின்விளக்குகள் இல்லாத சாலை; ஜானகிபுரம் கிராமவாசிகள் அச்சம்
ADDED : ஆக 16, 2024 11:53 PM

மறைமலை நகர் : திருக்கழுக்குன்றம் ஒன்றியம், மோசிவாக்கம் ஊராட்சி, ஜானகிபுரம் கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு வசிப்போர், 2 கி.மீ., தொலைவிற்கு ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து, பேருந்தில் ஏறி திருமணி வழியாக செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, அடிப்படை தேவைகளுக்கு சென்று வரும் நிலை உள்ளது.
இக்கிராமத்தில், வீடுகளின் அருகில் உள்ள தெருக்களில் மட்டும் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஜானகிபுரம் கூட்டு சாலையில் இருந்து, சுரங்கப்பாதையை கடக்கும் வரை, மின் விளக்குகள் இல்லை.
அதனால், இரவில் இச்சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
எனவே, இந்த சாலையில் மின் விளக்குகள் அமைத்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.