/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாயில் திடீர் உடைப்பு தெருவில் தேங்கிய கழிவுநீர்
/
கால்வாயில் திடீர் உடைப்பு தெருவில் தேங்கிய கழிவுநீர்
கால்வாயில் திடீர் உடைப்பு தெருவில் தேங்கிய கழிவுநீர்
கால்வாயில் திடீர் உடைப்பு தெருவில் தேங்கிய கழிவுநீர்
ADDED : ஆக 02, 2024 02:43 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி மண்டபத் தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த தெரு வழியாக, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ -- மாணவியர், இந்த தெரு வழியாக சென்று வருகின்றனர்.
இந்த தெருவில், ஜி.எஸ். டி., சாலை சந்திப்பின் ஓரம், இப்பகுதி மக்கள் தினமும் குப்பையை கொட்டி வருகின்றனர். நேற்று காலை, இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.
அதனால், மண்டபத் தெருவில் கழிவுநீர் வழிந்து ஓடியது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு அப்பகுதிவாசிகள் அவதியடைந்தனர். மேலும், தேங்கிய கழிவு நீரில் வாகனங்கள் வேகமாக சென்ற போது, கழிவு நீர் சக வாகன ஓட்டிகள் மீது தெறித்ததால், அவர்களுக்கு இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே, உடைந்த கழிவு நீர் கால்வாயை சரி செய்ய வேண்டும்.
மேலும், இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பையை முறையாக அகற்றவும், பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.