/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை நுாலகத்தில் கூடுதல் கட்டட பணி தீவிரம்
/
செங்கை நுாலகத்தில் கூடுதல் கட்டட பணி தீவிரம்
ADDED : ஆக 25, 2024 11:26 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மைய நுாலகத்தில், கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், மாவட்ட மைய நுாலகம் உள்ளது. இந்நுாலகத்தில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அறைகளில், வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட நுாலகத்தில் இருந்து, கிளை நுாலகங்களுக்கு, புதிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து புதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. இதை பாதுகாக்க போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.
இதை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அரசுக்கு கருத்துருவை, நுாலகத் துறையினர் அனுப்பி வைத்தனர்.
அதன்பின், 2022- - 23ம் நிதியாண்டில், கூடுதல் கட்டடம், நுழைவாயில் உள்ளிட்ட பணிகள் செய்ய, 35 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு, பொதுப்பணித் துறையினர் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள், கட்டடப் பணியை செய்து வருகின்றனர்.