/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டுமாரியம்மன் கோவிலில் இன்று ஆடி திருவிழா
/
தண்டுமாரியம்மன் கோவிலில் இன்று ஆடி திருவிழா
ADDED : ஜூலை 21, 2024 06:17 AM
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் கிராமத்தில் தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் முதல் வாரம், ஆடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி, 15ம் ஆண்டு ஆடி திருவிழா வைபவம், இம்மாதம் 19ல் பந்தக்காலுடன் துவங்கியது.
நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று காலை மஹா அபிஷேகம், மலர் அலங்காரம், பம்பை உடுக்கையுடன் அம்மனை வர்ணித்து பாடல் பாடப்படுகிறது.
மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல், 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல், மாலை 6:00 மணிக்கு கும்பம் களைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் ஆடி விழா நிறைவடைகிறது.