/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க மதிப்பீட்டு குழு உத்தரவு
/
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க மதிப்பீட்டு குழு உத்தரவு
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க மதிப்பீட்டு குழு உத்தரவு
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க மதிப்பீட்டு குழு உத்தரவு
ADDED : செப் 15, 2024 02:42 AM

செங்கல்பட்டு:ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க, மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டசபையின் மதிப்பீட்டுக்குழு, அதன் தலைவர் காந்திராஜன் தலைமையில், நேற்று ஆய்வு செய்தனர். இதில், சேவூர் ராமச்சந்திரன், அருண்குமார், உதயசூரியன், கருமாணிக்கம், வெங்கடேஷ்வரன் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இக்குழுவினர், குழிப்பாந்தண்டலம், நல்லுார், நத்தம்கரியச்சேரி, ஆரம்பாக்கம் ஆகிய கிராமங்களில், 1,783 சங்க உறுப்பினர்கள், பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை, கூட்டுறவுத்துறை மூலம் வழங்கி உள்ளதை ஆய்வு செய்தனர்.
கூட்டுறவுத் துறையின் வாயிலாக, ஒன்பது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 69.89 லட்சம் ரூபாய் கடனுதவிகளை, மதிப்பீட்டு குழு தலைவர் வழங்கினார்.
புலிகுன்றத்தில், கலைஞரின் கனவு இல்ல வீடு மற்றும் ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
இக்குழு அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்று ஆய்வு கூட்டத்தை, கலெக்டர் அலுவலகத்தில் நடத்தியது.இதில், மாவட்டத்தில் நடக்கும் முக்கிய திட்டப்பணிகளுக்கான பட்ஜெட், கூடுதல் நிதி தேவைப்படுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில், 47 பயனாளிகளுக்கு 1.52 கோடி மதிப்பிலான கடனுதவிகள். வேளாண் பொறியியல்துறையில்,மூன்று பயனாளிகளுக்கு, 3.52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை, குழு தலைவர் காந்திராஜன் வழங்கினார்.
இதில், கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கூடுதல் கலெக்டர் அனாமிகா, சப் - -கலெக்டர் நாராயணசர்மா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.