/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 09:13 PM
திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலைய பகுதியில், மாவட்ட செயலர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட மகளிர் அணி செயலரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி உள்ளிட்டோர், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தி.மு.க., ஆட்சியில், மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், அடுத்தடுத்து மின்கட்டணம் உயர்த்தியது, ரேஷனில் பாமாயில் உள்ளிட்டவற்றை வழங்காமல் நிறுத்த முயற்சிப்பது, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து பேசினர்.
மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.