/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீண்டும் ஓ.எம்.ஆர்., சாலையில் கழிவுநீர்
/
மீண்டும் ஓ.எம்.ஆர்., சாலையில் கழிவுநீர்
ADDED : ஜூலை 12, 2024 01:06 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, கன்னியம்மன் கோவில் தெருவில் வீடுகள்மற்றும் உணவகங்களிலிருந்து வெளியேறும்கழிவுநீர், ஓ.எம்.ஆர்., சாலையை கடந்து தெற்கு மாடவீதி வழியாகசெல்கிறது.
கடந்த 9ம் தேதி இந்த கால்வாயில் அடைப்புஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்தது. பின், பேரூராட்சி நிர்வாகம் அடைப்பை சரி செய்தது.
இந்நிலையில், ஓ.எம்.ஆர்., சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
தெற்கு மாடவீதி, ஓ.எம்.ஆர்., இணையும் இடத்தில் கால்வாய்க்காக கனரக இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்படுகிறது.
இதனால், நேற்று கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கன்னியம்மன் கோவில் தெரு, ஓ.எம்.ஆர்., சாலை இணையும் இடத்தில் உள்ள இணைப்பு கழிவுநீர் தொட்டி நிரம்பி சாலையில் பாய்ந்தது.