/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ராட்டினம்கிணறு ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் மதுப்பிரியர்கள் அடாவடி
/
ராட்டினம்கிணறு ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் மதுப்பிரியர்கள் அடாவடி
ராட்டினம்கிணறு ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் மதுப்பிரியர்கள் அடாவடி
ராட்டினம்கிணறு ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் மதுப்பிரியர்கள் அடாவடி
ADDED : ஆக 30, 2024 12:30 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில், ராட்டினம்கிணறு பகுதியில், கடந்த 2014ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. சாலையின் இருபுறமும், உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் விதமாக, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையை, அண்ணா நகர், மேலமையூர், ஆலப்பாக்கம், அமணம்பாக்கம், வல்லம் உள்ளிட்ட பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் நபர்கள், கடை திறந்ததும் மேம்பாலத்தின் அடியில், சர்வீஸ் சாலையோரம் காலியாக உள்ள இடங்களில் தனித்தனி குழுக்களாக அமர்ந்து, மது அருந்துகின்றனர்.
இதனால், இந்த பகுதியில் அடிக்கடி அடிதடி சம்பவங்கள் நடப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
டாஸ்மாக் கடை திறந்த உடன், மது வாங்கிக்கொண்டு இந்த மேம்பாலத்திற்கு வந்துவிடுகின்றனர். 12 மணிக்கு வரும் மதுப்பிரியர்கள், இரவு 10:00 மணி கடந்தும், இங்கு அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இதன் காரணமாக, மாலை மற்றும் இரவு நேரங்களில், பணி முடித்து செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து போலீசாரிடம் முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பொது வெளியில் மது அருந்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த மேம்பாலத்தின் கீழே மதுப்பிரியர்களின் அட்டூழியத்தால், பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இந்த இடத்தில், நகராட்சி நிர்வாகம் அல்லது நெடுஞ்சாலை துறை சார்பில், சிறுவர் விளையாட்டு பூங்கா ஏற்படுத்தி முறையாக பராமரித்தால், இந்த இடத்தை பயனுள்ள வகையில் மாற்ற முடியும். மாணவ- - மாணவியர் அச்சமின்றி சென்று வர முடியும்.
- எம்.பாலாஜி,
செங்கல்பட்டு.